Gopalakrishnan

வணக்கம் அண்ணா.நான் உங்களை யூடியூப் மூலமாக கடந்த ஒன்றரை வருடம் பின் தொடர்ந்து வருகின்றேன்.எனக்கு வயது முப்பத்தி இரண்டு ஆகின்றது.நானும் சாதாரண மனிதர்களை போன்று அறியாமை எனும் இருளில் மூழ்கி கிடந்தேன் தங்களது வீடியோக்களை பார்க்க துவங்கிய நாள் முதல் அந்த இருள் நீங்கி எனது வாழ்க்கையும் பிரகாசிக்க துவங்கியுள்ளது.தங்களை போன்ற குருவை காலம் என்னும் கடிகாரம் சந்திக்க வைத்தது நான் செய்த புண்ணியமாக உணர்கிறேன்.கடந்த ஒன்றரை வருடங்களாக பிரம்மச்சரியம் எனும் வாகனத்தில் பயணித்து வருகிறேன்.மீண்டும் தங்களது பயிற்சி முறையுடன் இணைந்து தொடர்ந்து பயணிக்க தங்கள் ஆசி வேண்டி அடியேன்...வாழ்க வளமுடன்.
Birthday
December 25
Location
Nagercoil