திருமந்திரம் 1 - 5

திருமூலர்​

விநாயகர் காப்பு
1
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.


பஞ்ச பூதம் எனும் ஐந்து கரங்களை உடைய இறைவா!
யானை முகமும் ஒற்றை தந்தமுமாய் விந்துவாகி நாதமாகி அனைத்து உயிர்களுக்கும் உயிர் ஊட்டும் இறைவா!
நந்தியாகிய பூமியில் வாழும் உயிர்களுக்கும் மகனாகி/ சந்ததி யாகி அருளும் இறைவா, உன்னை என்றென்றும் என் சிந்தையில் / அறிவில் / மனதில் வைத்து உன் அடிகளை போற்றுகின்றேன்

பாயிரம் (1-112)​

1.. கடவுள் வாழ்த்து

2
ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தானிருந் தான்உணர்ந் தெட்டே.

ஒன்றாக தானே எல்லாமுமாக இருக்கும் இறைவா!

இரண்டாக தானே சக்தியாய் இன்னருள் பூண்ட இறைவா

தானே படைத்து காத்து அழிக்கும் பிரம்மா விஷ்ணு சிவம் என நின்ற இறைவா

நான்கு திசைகளாக உணர விரிந்த இறைவா

ஐந்து பூதங்களையும், ஐம்புலன்களையும் வெல்ல துணையாகும் இறைவா

பஞ்ச பூதங்களில் காந்தமாகவும், மனிதனில் மனமாகவும் விரியும் இறைவா

மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் அனாகதம் விசுக்தி ஆக்கினை என எழும்பி ஏழாக மேல் செல்லும் இறைவா

எட்டாவது சக்கரமாகிய துரிய சகஸ்ரார தளத்தில் தன்னையே உணர்ந்து தானே தானை இருந்த இறைவா!


.3
போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

நம்முடைய உயிரில் உயிராக மன்னி, உயிரின் ஆழத்தில் மூலமாக இருக்கும் இறைவா!
குடும்பம் நடத்துவோருக்கு துணையாக இருக்கும் பெண்ணை போல, யோகிக்கு எத்திசை நோக்கினும் நல்ல துணையாக நாதத்தில் (துரிய சகஸ்ரார தளத்தில்) துணை வரும் இறைவா
உடலின் தென் திசையான மூலாதார சுவாதிஷ்டானத்தில் ஆற்றல் விரையம் ஆகும் போது மரணம் என்றாலும் மேல் திசையான ஆக்கினை துரியத்தில் நிலைக்க செய்து மரணத்தையும் உதைத்த இறைவனை நான் விளக்குவேன்- கூறுவேன்!



ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின்று உன்னியான் போற்றிசெய் வேனே.

உயிரோடு உயிராக ஒக்க கலந்து நிற்கும் ஈசனை!,
இன்ப மயக்கத்தை விரும்பாத தேவர்களாக வாழும் மனிதர்கள் என்றும் மனமற்று மலமற்று (ஆக்கினை துரிய ) நாதத்தில் ஏத்திடும் ஈசனை!
என்றென்றும் உடன் இருந்தாலும் பலரும் அறியாத ஈசனை!
அவனோடு கலந்து, உணர்ந்து என்றும் போற்றி நான் வாழ்வேன்

5
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
வெளி தீபத்துக்கு எண்ணை மெய் ஆவது போல, உள் தீபமான ஆக்கினை முதலான ஏழு சக்கரங்களுக்கும் உடலுக்கும் மெய் பொருளாக (விந்து / நாத சக்தியாக) இருக்கும் இறைவா, எனக்கு புகலிடமாக அண்டமாக இருக்கும்
ஆக்கினை துரியம் மனோன்மணியம் முதலான அண்டத்து சக்கரங்களுக்கு மெய்யை (விந்து நாத சக்தியை அனுப்பி காக்கும்) இறைவா
உன்னை நான் பகலும் இரவும் பணிந்து பணிந்து ஏற்றி வைத்து (மேலை துவாரத்தில்)
இந்த உலகத்தில் இருள் எல்லாம் நீங்கி தெளிவு பெற்று நின்றேனே!
 
  • Like
Reactions: Aravinthan